Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:85 — இறுதியான எச்சரிக்கை

அவர்களுடைய செல்வத்தாலோ அல்லது அவர் களுடைய குழந்தைகளாலோ கவரப்பட்டு விடாதீர்; கடவுள் இவைகளை இவ்வுலகில் அவர்களுக்கு துக்கத்திற்கான மூலகாரணங் களாக ஆக்குகின்றார், மேலும் நம்ப மறுப்பவர் களாக அவர்களுடைய ஆன்மாக்கள் பிரிந்து செல்கின்றன.

[9:84] அவர்களில் எவரும் மரணித்து விடும்போது, அவர்களுக்காக நீர் ஈமப் பிரார்த்தனையைக் கடைப்பிடிக்கவும் வேண்டாம், அன்றியும் அவருடைய அடக்கஸ்தலத்தில் நிற்கவும் வேண்டாம். அவர்கள் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் நம்பமறுத்து விட்டனர், மேலும் பாவகரமான நிலையிலேயே மரணித்து விட்டனர்.

[9:86] “கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் அவருடைய தூதருடன் சேர்ந்து போராடுங்கள்” என்று அறிவிக்கும் ஒரு சூரா வெளிப்படுத்தப் படும்போது, அவர்களில் உள்ள பலமானவர்கள் கூட, “பின்தங்கிக் கொள்ள எங்களை விட்டு விடுங்கள்!” என்று கூறுகின்றனர்.