குர்ஆன் 9:86 — இறுதியான எச்சரிக்கை
“கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் அவருடைய தூதருடன் சேர்ந்து போராடுங்கள்” என்று அறிவிக்கும் ஒரு சூரா வெளிப்படுத்தப் படும்போது, அவர்களில் உள்ள பலமானவர்கள் கூட, “பின்தங்கிக் கொள்ள எங்களை விட்டு விடுங்கள்!” என்று கூறுகின்றனர்.
[9:85] அவர்களுடைய செல்வத்தாலோ அல்லது அவர் களுடைய குழந்தைகளாலோ கவரப்பட்டு விடாதீர்; கடவுள் இவைகளை இவ்வுலகில் அவர்களுக்கு துக்கத்திற்கான மூலகாரணங் களாக ஆக்குகின்றார், மேலும் நம்ப மறுப்பவர் களாக அவர்களுடைய ஆன்மாக்கள் பிரிந்து செல்கின்றன.
[9:87] அவர்கள் சரீர உழைப்பில்லாதவர்களுடன் சேர்ந்திருப்பதை தேர்ந்தெடுத்துக் கொண் டனர். அதன் விளைவாக, அவர்களுடைய இதயங்கள் முத்திரையிடப்பட்டன. எனவே, அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.