Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:84 — இறுதியான எச்சரிக்கை

அவர்களில் எவரும் மரணித்து விடும்போது, அவர்களுக்காக நீர் ஈமப் பிரார்த்தனையைக் கடைப்பிடிக்கவும் வேண்டாம், அன்றியும் அவருடைய அடக்கஸ்தலத்தில் நிற்கவும் வேண்டாம். அவர்கள் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் நம்பமறுத்து விட்டனர், மேலும் பாவகரமான நிலையிலேயே மரணித்து விட்டனர்.

[9:83] அவர்கள் உம்மோடு சேர்ந்து தயாராவதற்கு உம்முடைய அனுமதியை அவர்கள் கேட்கும் சூழ்நிலைக்குக் கடவுள் உம்மை மீண்டும் கொண்டு வந்தால், “நீங்கள்” என்னோடு மீண்டும் சேர்ந்து ஒருபோதும் தயாராகவும் வேண்டாம், அன்றி என்னோடு சேர்ந்து எந்த எதிரியுடனும் எப்பொழுதும் போரிடவும் வேண்டாம். ஏனெனில் சரீர உழைப்பில்லாதவர்களோடு சேர்ந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் முதலிலேயே தேர்ந்தெடுத்து விட்டீர் கள். ஆகையால், நீங்கள் சரீர உழைப்பில்லாத வர்களுடன் சேர்ந்து தங்கிவிடத்தான் வேண்டும்” என்று கூற வேண்டும்.

[9:85] அவர்களுடைய செல்வத்தாலோ அல்லது அவர் களுடைய குழந்தைகளாலோ கவரப்பட்டு விடாதீர்; கடவுள் இவைகளை இவ்வுலகில் அவர்களுக்கு துக்கத்திற்கான மூலகாரணங் களாக ஆக்குகின்றார், மேலும் நம்ப மறுப்பவர் களாக அவர்களுடைய ஆன்மாக்கள் பிரிந்து செல்கின்றன.