குர்ஆன் 12:30 — ஜோஸஃப்
அந்நகரில் இருந்த சில பெண்கள்:“ஆளுநரின் மனைவி தன் ஊழியரை வசீகரிக்க முயற்சி செய்கின்றாள். அவள் அவர் மீது ஆழமான காதல் கொண்டுவிட்டாள். அவள் வழிதவறிச் சென்று விட்டாள் என்பதை நாம் காண்கின்றோம்” என்று அரட்டை அடித்தனர்.
[12:29] “ஜோஸஃபே, இந்த சம்பவத்தை அலட்சியப் படுத்தி விடுவீராக. (என் மனைவியே) உன்னைப் பொறுத்தவரை, நீ உன் பாவத்திற் காக மன்னிப்புத்தேட வேண்டும். நீ ஒரு தவறை செய்துவிட்டாய்”.
[12:31] அவர்களுடைய அரட்டையைப் பற்றி அவள் கேள்விப்பட்டபோது, அவள் அவர்களை வரவழைத்தாள், வசதியான ஓர் இடத்தை அவர்களுக்காகத் தயார் செய்தாள், மேலும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கத்தியைக் கொடுத்தாள். பின்னர் அவள் அவரிடம் “அவர்களுடைய அறைக்குள் நுழைவீராக” என்று கூறினாள். அவர்கள் அவரைக் கண்ட போது, அவர்கள் தங்கள் கரங்களை வெட்டிக் கொள்ளும் அளவிற்கு, அவரைக் கண்டு மிகவும் வியப்பிற்குள்ளாயினர்*. அவர்கள், “கடவுள் துதிப்பிற்குரியவர், இவர் ஒரு மனிதரே இல்லை; இவர் ஒரு கண்ணியமிக்க வானவராவார்” என்று கூறினார்கள்.