Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:83 — ஜோஸஃப்

அவர், “உண்மையில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்ச்சியை நிறைவேற்ற சதியாலோசனை செய்து இருக்கின்றீர்கள். அமைதியான பொறுமையே எனது ஒரே புகலிடமாகும். அவர்கள் அனை வரையும் கடவுள் என்னிடம் திரும்பக் கொண்டு வருவாராக; அவர் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்” என்று கூறினார்.

[12:82] ‘எங்களுடன் கூட இருந்த அந்தச் சமூகத் தாரையும், எங்களுடன் திரும்பி வந்த பிரயாணி களின் கூட்டத்தையும் நீங்கள் விசாரிக்கலாம். நாங்கள் உண்மையையே கூறுகின்றோம்.’ ”

[12:84] “நான் ஜோஸஃபை நினைத்து கவலை யுறுகின்றேன்” என்று கூறியவராக அவர், அவர் களிடமிருந்து திரும்பிக் கொண்டார். அதிகமான கவலையால் அவருடைய கண்கள் வெளுத்துப் போய்விட்டன; அவர் மெய்யாகவே துக்கம் அடைந்தார்.