Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:145 — பசுங்கன்று

வேதத்தை பின்பற்றுபவர்களிடம் எல்லா வகை யான அற்புதங்களையும் நீர் காட்டிய போதி லும், உங்களுடைய கிப்லாவை அவர்கள் பின்பற்றமாட்டார்கள். அன்றி அவர்களுடைய கிப்லாவை நீங்களும் பின்பற்ற வேண்டாம். அவர்கள்கூட ஒருவர் மற்றவருடைய கிப்லாவை பின்பற்றுவதில்லை. அறிவு உம்மிடம் வந்து விட்ட பிறகும் நீர் அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்கினால், நீர் வரம்பு மீறியவர்களுடன் சேர்ந்தவராவீர்.

[2:144] (சரியான திசையைத் தேடிக் கொண்டிருந்த நிலையில்) நீர் உமது முகத்தை வானத்தின் பக்கம் திருப்புவதை நாம் கண்டோம். உம்மை திருப்திபடுத்தும் ஒரு கிப்லாவை நாம் இப்பொழுது நியமிக்கின்றோம். இனிமேல் புனித மஸ்ஜிதை நோக்கி உமது முகத்தை திருப்பிக் கொள்ளவேண்டும். நீங்கள் எங்கிருந்த போதிலும், நீங்கள் அனைவரும் அதனை நோக்கியே உங்களது முகங்களை திருப்பிக் கொள்ள வேண்டும். முந்திய வேதத்தைப் பெற்றவர்கள் இது அவர்களுடைய இரட்சகரிட மிருந்துள்ள உண்மை என்பதை அறிவார்கள். அவர்கள் செய்யும் எந்த ஒன்றையும் ஒரு போதும் கடவுள் அறியாதவர் அல்ல.

[2:146] வேதத்தை பெற்றவர்கள் இதில் உள்ள உண்மையை, தங்களுடைய சொந்தக் குழந்தைகளை அறிவது போல் அவர்கள் அறிவார்கள், ஆயினும், அவர் களில் சிலர் அறிந்து கொண்டே, உண்மையை மறைக்கின்றார்கள்.