குர்ஆன் 2:144 — பசுங்கன்று
(சரியான திசையைத் தேடிக் கொண்டிருந்த நிலையில்) நீர் உமது முகத்தை வானத்தின் பக்கம் திருப்புவதை நாம் கண்டோம். உம்மை திருப்திபடுத்தும் ஒரு கிப்லாவை நாம் இப்பொழுது நியமிக்கின்றோம். இனிமேல் புனித மஸ்ஜிதை நோக்கி உமது முகத்தை திருப்பிக் கொள்ளவேண்டும். நீங்கள் எங்கிருந்த போதிலும், நீங்கள் அனைவரும் அதனை நோக்கியே உங்களது முகங்களை திருப்பிக் கொள்ள வேண்டும். முந்திய வேதத்தைப் பெற்றவர்கள் இது அவர்களுடைய இரட்சகரிட மிருந்துள்ள உண்மை என்பதை அறிவார்கள். அவர்கள் செய்யும் எந்த ஒன்றையும் ஒரு போதும் கடவுள் அறியாதவர் அல்ல.
[2:143] இவ்விதமாக மக்களுக்கிடையில் சாட்சியாளர் களாக நீங்கள் பணியாற்றும் பொருட்டும், மேலும் உங்களுக்கிடையில் சாட்சியாளராக தூதர் பணியாற்றும் பொருட்டும், நாம் உங்களை ஒரு நடு நிலையான சமூகமாக ஆக்கினோம். தூதரை விட்டும் தங்கள் குதிகால்களின் மீது திரும்பிவிடுவோரி லிருந்து, தூதரை உடனடியாகப் பின்பற்றக் கூடியவர்களைப் பிரித்தறிவிப்பதற்காகவே நாம் உம்முடைய முதல் கிப்லாவின் திசையை மாற்றினோம். அது ஒரு கடினமான சோதனை தான் எனினும் கடவுள்-ஆல் வழி நடத்தப் பட்டோருக்கல்ல. கடவுள் உங்களுடைய வழிபாட்டை ஒரு போதும் வீணாக்கி விடுவதில்லை. கடவுள் மனிதர்கள் பால் மிக்க இரக்கமிக்கவராக, மிக்க கருணையாளராக உள்ளார்.
[2:145] வேதத்தை பின்பற்றுபவர்களிடம் எல்லா வகை யான அற்புதங்களையும் நீர் காட்டிய போதி லும், உங்களுடைய கிப்லாவை அவர்கள் பின்பற்றமாட்டார்கள். அன்றி அவர்களுடைய கிப்லாவை நீங்களும் பின்பற்ற வேண்டாம். அவர்கள்கூட ஒருவர் மற்றவருடைய கிப்லாவை பின்பற்றுவதில்லை. அறிவு உம்மிடம் வந்து விட்ட பிறகும் நீர் அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்கினால், நீர் வரம்பு மீறியவர்களுடன் சேர்ந்தவராவீர்.