குர்ஆன் 27:9 — எறும்பு
“மோஸஸே, நான் தான், கடவுள், சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[27:8] அவர் அதன் அருகில் வந்தபோது, அவர் அழைக்கப்பட்டார்: “நெருப்பிற்குள்ளிருந்து (பேசுகின்ற) அந்த ஒருவரும், மேலும் அதனைச் சூழ்ந்திருப்பவர்களும் பாக்கியமானவர்கள்”. கடவுள் துதிப்பிற்குரியவர், பிரபஞ்சத்தின் இரட்சகர்.
[27:10] “உமது கைத்தடியைக் கீழே வீசுவீராக.” அது ஒரு பிசாசைப் போல் நகர்வதை அவர் கண்டபோது” அவர் திரும்பியடித்து ஓடினார். “மோஸஸே, அச்சம் கொள்ளாதீர். என்னுடைய தூதர்கள் அச்சப்பட வேண்டியதில்லை.