குர்ஆன் 29:27 — சிலந்திப் பூச்சி
நாம் அவருக்கு ஐசக்கையும் மற்றும் ஜேக்கபையும் தந்தோம், அவருடைய சந்ததியினருக்கு வேதம் வழங்கப்பட்ட தூதுத்துவத்தையும் மேலும் வேதங்களையும் நாம் கொடுத்தோம். இவ்வுலகில் அவருக்குரிய சன்மானத்தைக் கொண்டு அவருக்கு நாம் கொடையளித்தோம், மேலும் மறுவுலகில் அவர் நிச்சயமாக நன்னெறியாளர் களுடன் இருப்பார்.
[29:26] லோத் அவருடன் நம்பிக்கை கொண்டார், மேலும், “நான் என் இரட்சகரிடம் குடி பெயர்ந்து செல்கின்றேன். அவர்தான் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்” என்று கூறினார்.
[29:28] லோத் தன் சமூகத்தாரிடம் கூறினார், “உங்களுக்கு முன்னர் உலகில் எவர் ஒருவரும் எக்காலத்திலும் செய்திராத, இத்தகையதொரு அருவருக்கத்தக்கதை நீங்கள் செய்கின்றீர்கள்.