குர்ஆன் 3:114 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்கள் கடவுள் மீதும் இன்னும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர், அவர்கள் நன்னெறியினை ஆதரித்து தீமை யைத் தடுக்கின்றனர் இன்னும் அவர்கள் நன்னெறியான காரியங்களைச் செய்ய விரைகின்றனர். இவர்களே நன்னெறி யாளர்கள்.
[3:113] அவர்கள் அனைவரும் சமமல்ல: வேதத்தைப் பின்பற்றுவோர் மத்தியிலும்-நன்னெறியாளர்கள் இருக்கவே செய்கின்றனர். இரவு முழுவதும் அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஓதுகின்றனர். மேலும் சிரவணக்கம் செய்கின்றனர்.
[3:115] அவர்கள் செய்யும் எந்த நல்லதும் வெகுமதி யளிக்கப்படாமல் போகாது. கடவுள் நன்னெறி யாளர்களை முற்றிலும் அறிந்தவர்.