குர்ஆன் 3:178 — இம்ரானின் குடும்பத்தினர்
நம்ப மறுப்பவர்கள், நாம் அவர்களை, அவர் களுடைய சொந்த நன்மைக்காக வழி நடத்து கின்றோம் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். அவர்களுடைய பாவத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே நாம் அவர்களை வழி நடத்துகின்றோம். அவர்கள் இழிவானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[3:177] நம்பிக்கைக்கு பதிலாக நம்பிக்கையின்மையை தேர்ந்தெடுப்பவர்கள், சிறிதளவும் கடவுள்-க்கு தீங்கிழைப்பதில்லை. அவர்கள் வேதனை மிக்கதொரு தண்டனைக்குள்ளாகி விட்டனர்.
[3:179] நல்லதில் இருந்து கெட்டதைப் பிரித்து அடையாளங்காட்டாமல் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இருக்கும்படி நம்பிக்கையாளர் களை கடவுள் விட்டுவிடுவதில்லை. அன்றி உங்களுக்கு எதிர்காலத்தை பற்றியும் கடவுள் அறிவிப்பதில்லை, ஆனால் அவருடைய தூதர்களிலிருந்து* அவர் தேர்ந்தெடுப்பவர் களின் மீது அத்தகைய அறிவை கடவுள் வழங்கு கின்றார். ஆகையால், நீங்கள் கடவுள்-ன் மீதும் அவருடைய தூதரின் மீதும