குர்ஆன் 3:20 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்கள் உம்முடன் தர்க்கித்தால், அப்போது, “நான் கடவுள்-க்கு மட்டும் அடிபணிந்து விட்டேன்; நானும் என்னைப் பின்பற்றுவோரும்”, என்று கூறுவீராக. வேதத்தைப் பெற்றவர் களுக்கும் மற்றும் பெறாதவர்களுக்கும், “நீங்கள் அடிபணிவீர்களா?” என்று நீர் பிரகடனம் செய்ய வேண்டும் அவர்கள் அடிபணிந்தால், அப்போது அவர்கள் வழிகாட்டல் பெற்று விட்டார்கள். ஆனால் அவர்கள் திரும்பிவிட்டால், உம்முடைய ஒர
[3:19] கடவுள்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் “அடிபணிதல்” ஆகும். அதற்கு நேர்மாற்றமாக வேதத்தைப் பெற்றவர்களோ தாங்கள் அறிவைப் பெற்றிருந்த போதிலும், பொறாமை காரணமாக இவ்வுண்மையை மறுக்கின்றனர். கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுக்கும் இத்தகையவர்களை கணக்கிடுவதில் கடவுள் மிகவும் கண்டிப்பானவர்.
[3:21] கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்து விட்டவர்கள், மேலும் வேதம் வழங்கப்பட்டவர் களை நீதமின்றிக் கொன்றவர்கள், மேலும் மக்கள் மத்தியில் நீதத்தை ஆதரித்தவர்களைக் கொன்றவர்கள்,ஆகியவர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை வாக்களிப்பீராக.