Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:100 — பெண்கள்

எவரொருவர் கடவுள்-ன் நிமித்தம் குடிபெயர்ந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் உயர்ந்த வெகுமதிகளையும், மேலும் செல்வச் செழிப்பையும் காண்பார். எவரொருவர் கடவுள்-ஐயும் அவரது தூதரையும் நோக்கியவராக அவருடைய வீட்டை விட்டு விட்டு, வேறு இடத்திற்குச் சென்று குடியேறி அதன் பிறகு அவர் மரணித்துவிட்டால் அவருடைய வெகுமதி கடவுள்-இடத்தில் தயாராக உள்ளது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[4:99] இவர்கள் கடவுள்-ஆல் மன்னிக்கப்படக் கூடும். கடவுள் பிழை பொறுப்பவர், மன்னிப்பவர்.

[4:101] போர் காலங்களில் நீங்கள் பயணம் செய்யும் போது, நம்பமறுப்பவர்கள் உங்களை தாக்கக் கூடும் என்று நீங்கள் அஞ்சினால் உங்களுடைய தொடர்பு தொழுகைகளை (ஸலாத்) சுருக்கிக் கொள்வதால் உங்கள் மீது குற்றமில்லை. நிச்சயமாக நம்ப மறுப்பவர்கள் உங்களுடைய தீவிரமான எதிரிகளாவர்.