குர்ஆன் 4:101 — பெண்கள்
போர் காலங்களில் நீங்கள் பயணம் செய்யும் போது, நம்பமறுப்பவர்கள் உங்களை தாக்கக் கூடும் என்று நீங்கள் அஞ்சினால் உங்களுடைய தொடர்பு தொழுகைகளை (ஸலாத்) சுருக்கிக் கொள்வதால் உங்கள் மீது குற்றமில்லை. நிச்சயமாக நம்ப மறுப்பவர்கள் உங்களுடைய தீவிரமான எதிரிகளாவர்.
[4:100] எவரொருவர் கடவுள்-ன் நிமித்தம் குடிபெயர்ந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் உயர்ந்த வெகுமதிகளையும், மேலும் செல்வச் செழிப்பையும் காண்பார். எவரொருவர் கடவுள்-ஐயும் அவரது தூதரையும் நோக்கியவராக அவருடைய வீட்டை விட்டு விட்டு, வேறு இடத்திற்குச் சென்று குடியேறி அதன் பிறகு அவர் மரணித்துவிட்டால் அவருடைய வெகுமதி கடவுள்-இடத்தில் தயாராக உள்ளது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[4:102] அவர்களுடன் நீர் இருக்கும்போது, மேலும் அவர்களுக்கு தொடர்புத்தொழுகை (ஸலாத்) நடத்தினால், உங்களில் சிலர் பாதுகாப்பிற்கு நிற்கட்டும். அவர்கள் தங்களது ஆயுதங்களை ஏந்திக்கொள்ளட்டும், மேலும் நீர் சிரம் பணியும் சமயத்தில் உங்களுக்கு பின்புறமாக அவர்கள் நின்று கொள்ளட்டும். பின்னர், தொழாத மற்ற பிரிவினர் தங்களுடைய முறையை எடுத்துக் கொண்டு தொழுகையினை உம்முடன் சேர்ந்து தொழட்டும், அதேசமயம் மற்றவர்கள் பாதுகாப்பிற்கு நின்றவாறு தங்கள் ஆயுதங்களை ஏந்தி நிற்கட்டும். நம்ப மறுப்பவர்கள் உங்களை ஒரே தடவையில் தாக்கி முடிப்பதற்காக நீங்கள் உங்கள் ஆயுதங்கள் மற்றும் உங்கள் தளவாடங்களின் மீது கவனமின்றி இருப்பதைக் காண விரும்புகின்றார் கள். மழையினாலோ அல்லது காயத்தினாலோ, உங்களுக்கு இடையூறு ஏற்பட்டால், நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் பட்சத்தில், உங்களது ஆயுதங்களைக் கீழே வைப்பதில் உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. கடவுள் நம்பமறுப் பவர்களுக்கு இழிவு மிக்கதொரு தண்டனை யைத் தயார் செய்து வைத்திருக்கின்றார்.