Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:102 — பெண்கள்

அவர்களுடன் நீர் இருக்கும்போது, மேலும் அவர்களுக்கு தொடர்புத்தொழுகை (ஸலாத்) நடத்தினால், உங்களில் சிலர் பாதுகாப்பிற்கு நிற்கட்டும். அவர்கள் தங்களது ஆயுதங்களை ஏந்திக்கொள்ளட்டும், மேலும் நீர் சிரம் பணியும் சமயத்தில் உங்களுக்கு பின்புறமாக அவர்கள் நின்று கொள்ளட்டும். பின்னர், தொழாத மற்ற பிரிவினர் தங்களுடைய முறையை எடுத்துக் கொண்டு தொழுகையினை உம்முடன் சேர்ந்து தொழட்டும், அதேசமயம் மற்றவர்கள் பாதுகாப்பிற்கு நின்றவாறு தங்கள் ஆயுதங்களை ஏந்தி நிற்கட்டும். நம்ப மறுப்பவர்கள் உங்களை ஒரே தடவையில் தாக்கி முடிப்பதற்காக நீங்கள் உங்கள் ஆயுதங்கள் மற்றும் உங்கள் தளவாடங்களின் மீது கவனமின்றி இருப்பதைக் காண விரும்புகின்றார் கள். மழையினாலோ அல்லது காயத்தினாலோ, உங்களுக்கு இடையூறு ஏற்பட்டால், நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் பட்சத்தில், உங்களது ஆயுதங்களைக் கீழே வைப்பதில் உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. கடவுள் நம்பமறுப் பவர்களுக்கு இழிவு மிக்கதொரு தண்டனை யைத் தயார் செய்து வைத்திருக்கின்றார்.

[4:101] போர் காலங்களில் நீங்கள் பயணம் செய்யும் போது, நம்பமறுப்பவர்கள் உங்களை தாக்கக் கூடும் என்று நீங்கள் அஞ்சினால் உங்களுடைய தொடர்பு தொழுகைகளை (ஸலாத்) சுருக்கிக் கொள்வதால் உங்கள் மீது குற்றமில்லை. நிச்சயமாக நம்ப மறுப்பவர்கள் உங்களுடைய தீவிரமான எதிரிகளாவர்.

[4:103] நீங்கள் உங்களுடைய தொடர்புத் தொழுகையை (ஸலாத்) நிறைவு செய்தவுடன், நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ அல்லது படுத்த நிலையிலோ* நீங்கள் கடவுள்-ஐ நினைவு கூர்ந்திட வேண்டும். போர் முடிந்தவுடன் நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்; தொடர்புத் தொழுகை கள் (ஸலாத்) நம்பிக்கையாளர்கள் மீது குறிப்பிட்ட நேரங்களில் விதியாக்கப்பட்டுள்ளது.