குர்ஆன் 4:19 — பெண்கள்
நம்பிக்கை கொண்டோரே, பெண்களின் உயிலுக்கு எதிராக அவர்கள் விட்டுச் சென்றதை நீங்கள் அடைவது சட்டத்திற்கு புறம்பானது. அவர்கள் விபச்சாரம் செய்தது நிரூபிக்கப் பட்டாலன்றி நீங்கள் அவர்களுக்கு அளித்த வற்றில் இருந்து எதையும் திரும்பக் கொடுக்கும் படி அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. நீங்கள் அவர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும். நீங்கள் அவர்களை வெறுப்பீர் களாயின், கடவுள் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தியுள்ள ஒன்றை நீங்கள் வெறுக்கக் கூடும்.
[4:18] எவர்கள், மரணம் அவர்களிடம் வரும்வரை பாவங்கள் செய்துவிட்டு, பின்னர் “இப்போது நான் வருந்தித்திருந்துகின்றேன்” என்று கூறினால் அவர்களின் வருந்தித்திருந்துதல் ஏற்றுக் கொள்ளப்படாது. அன்றியும் நம்ப மறுப்பவர்களாகவே மரணிக்கின்றவர்களிடம் இருந்தும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. நாம் இவர்களுக்காக ஒரு வேதனை நிறைந்த தண்டனையை தயார் செய்து இருக்கின்றோம்.
[4:20] நீங்கள் தற்போதுள்ள மனைவிக்கு பதிலாக, இன்னொரு மனைவியை திருமணம் செய்ய விரும்பினால், நீங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் கொடுத்திருந்தாலும், நீங்கள் அவளு க்கு கொடுத்ததில் இருந்து எதையும் திரும்ப எடுத்துக் கொள்ளகூடாது. நீங்கள் வஞ்சக மாகவும், குரோதமாகவும், மேலும் பாவகரமாகவும் அதை எடுத்துக் கொள்வீர்களா?