குர்ஆன் 4:88 — பெண்கள்
(உங்களுக்கிடையில் உள்ள) நயவஞ்சகர்கள் சம்பந்தமாக நீங்கள் ஏன் உங்களை இரண்டு பிரிவுகளாக ஆக்கிக்கொள்ளவேண்டும்? அவர் களை அவர்களுடைய சுயமான நடத்தையின் காரணமாக கடவுள் தான் தண்டித்தார். கடவுள்-ஆல் வழிகேட்டிற்கு அனுப்பப்பட்டவர் களை, வழி நடத்த நீங்கள் விரும்புகின்றீர்களா? எவர்களைக் கடவுள் வழிகேட்டிற்கு அனுப்பி விடுகின்றாரோ, அவர்களை வழி நடத்த ஒரு வழியை உங்களால் ஒரு போதும் காணஇயலாது.
[4:87] கடவுள் : அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அவர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் நிச்சயமாக உங்களை ஒன்று கூட்டுவார்-அந்த நாள் தவிர்க்க இயலாத நாள். கடவுள்-உடைய விவரிப்பைக் காட்டிலும் எவருடையது அதிக உண்மை நிறைந்தது?
[4:89] அவர்கள் நம்ப மறுத்தது போல் நீங்களும் நம்ப மறுத்து, பின்னர் நீங்களும், அவர்களைப் போன்று ஆகி விட வேண்டும், என்று அவர்கள் விரும்புகின்றார்கள். கடவுள்-ன் பாதையில் உங்களோடு சேர்ந்து அவர்கள் புறப்படத் தயாரா காத வரை அவர்களை நண்பர்களாக கருத வேண்டாம். அவர்கள் உங்களுக்கெதிராகத் திரும்பினால் நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும், மேலும் போரில் நீங்கள் அவர்களைச் சந்தித்தால், நீங்கள் அவர்களைக் கொல்லலாம். நீங்கள் அவர்களை நண்பர்களாகவோ அல்லது கூட்டாளிகளாகவோ ஏற்றுக் கொள்ள வேண் டாம்.*