Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:89 — பெண்கள்

அவர்கள் நம்ப மறுத்தது போல் நீங்களும் நம்ப மறுத்து, பின்னர் நீங்களும், அவர்களைப் போன்று ஆகி விட வேண்டும், என்று அவர்கள் விரும்புகின்றார்கள். கடவுள்-ன் பாதையில் உங்களோடு சேர்ந்து அவர்கள் புறப்படத் தயாரா காத வரை அவர்களை நண்பர்களாக கருத வேண்டாம். அவர்கள் உங்களுக்கெதிராகத் திரும்பினால் நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும், மேலும் போரில் நீங்கள் அவர்களைச் சந்தித்தால், நீங்கள் அவர்களைக் கொல்லலாம். நீங்கள் அவர்களை நண்பர்களாகவோ அல்லது கூட்டாளிகளாகவோ ஏற்றுக் கொள்ள வேண் டாம்.*

[4:88] (உங்களுக்கிடையில் உள்ள) நயவஞ்சகர்கள் சம்பந்தமாக நீங்கள் ஏன் உங்களை இரண்டு பிரிவுகளாக ஆக்கிக்கொள்ளவேண்டும்? அவர் களை அவர்களுடைய சுயமான நடத்தையின் காரணமாக கடவுள் தான் தண்டித்தார். கடவுள்-ஆல் வழிகேட்டிற்கு அனுப்பப்பட்டவர் களை, வழி நடத்த நீங்கள் விரும்புகின்றீர்களா? எவர்களைக் கடவுள் வழிகேட்டிற்கு அனுப்பி விடுகின்றாரோ, அவர்களை வழி நடத்த ஒரு வழியை உங்களால் ஒரு போதும் காணஇயலாது.

[4:90] எவர்களுடன் நீங்கள் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டவர்களும், மேலும் உங்களுடன் சண்டையிட விரும்பாதவர்களாக உங்களிடம் வருபவர்களும், அன்றி தங்கள் உறவினர் களுடன் சண்டையிடாதவர்களும், இதிலிருந்து விலக் கப்பட்டவர்கள் ஆவர். கடவுள் நாடியிருந்தால், உங்களுக்கு எதிராக சண்டையிடுவதற்கு அவர்களை அவர் அனுமதித்திருக்க இயலும். ஆகையால், உங்களை அவர்கள் விட்டு விட்டு, உங்களிடம் சண்டையிடுவதை தவிர்த்துக் கொண்டு, மேலும் உங்களிடம் சமாதானத்தைக் கோரினால் அப்போது அவர்களுடன் சண்டையிட கடவுள் உங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.