குர்ஆன் 4:90 — பெண்கள்
எவர்களுடன் நீங்கள் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டவர்களும், மேலும் உங்களுடன் சண்டையிட விரும்பாதவர்களாக உங்களிடம் வருபவர்களும், அன்றி தங்கள் உறவினர் களுடன் சண்டையிடாதவர்களும், இதிலிருந்து விலக் கப்பட்டவர்கள் ஆவர். கடவுள் நாடியிருந்தால், உங்களுக்கு எதிராக சண்டையிடுவதற்கு அவர்களை அவர் அனுமதித்திருக்க இயலும். ஆகையால், உங்களை அவர்கள் விட்டு விட்டு, உங்களிடம் சண்டையிடுவதை தவிர்த்துக் கொண்டு, மேலும் உங்களிடம் சமாதானத்தைக் கோரினால் அப்போது அவர்களுடன் சண்டையிட கடவுள் உங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.
[4:89] அவர்கள் நம்ப மறுத்தது போல் நீங்களும் நம்ப மறுத்து, பின்னர் நீங்களும், அவர்களைப் போன்று ஆகி விட வேண்டும், என்று அவர்கள் விரும்புகின்றார்கள். கடவுள்-ன் பாதையில் உங்களோடு சேர்ந்து அவர்கள் புறப்படத் தயாரா காத வரை அவர்களை நண்பர்களாக கருத வேண்டாம். அவர்கள் உங்களுக்கெதிராகத் திரும்பினால் நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும், மேலும் போரில் நீங்கள் அவர்களைச் சந்தித்தால், நீங்கள் அவர்களைக் கொல்லலாம். நீங்கள் அவர்களை நண்பர்களாகவோ அல்லது கூட்டாளிகளாகவோ ஏற்றுக் கொள்ள வேண் டாம்.*
[4:91] உங்களுடனும் மேலும் அவர்களுடைய மக்களு டனும் சமாதானம் செய்து கொள்ள விரும்பும் மற்றவர்களையும் நீங்கள் காண்பீர்கள். ஆயினும் போர் ஆரம்பித்த உடன் உங்களுக்கு எதிராக அவர்கள் சண்டையிடுவார்கள். இந்த மக்கள் உங்களை விட்டு விட்டு, உங்களுடன் சமாதானம் செய்ய முன்வந்து மேலும் உங்களுடன் சண்டையிடுவதை நிறுத்திக் கொள்ளாத வரை அவர்களை நீங்கள் சந்திக்கும் போது அவர்களுடன் சண்டையிடலாம். இவர்களுக் கெதிராக நாம் உங்களுக்கொரு தெளிவான அதிகாரம் அளிக்கின்றோம்.