குர்ஆன் 5:79 — விருந்து
அவர்கள் ஒருவருக்கொருவர் தீமை செய்வதி லிருந்து தடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் செய்தது உண்மையில் துக்ககரமானது ஆகும்.
[5:78] டேவிட் மற்றும் மேரியின் மகன் இயேசுவின் நாவால், இஸ்ரவேலின் சந்ததியர்களில் உள்ள நம்பமறுப்பவர்கள் கண்டனம் செய்யப்பட்டார் கள். அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகவும், வரம்பு மீறியவர்களாகவும் இருந்ததே இதற்குக் காரணமாகும்.
[5:80] அவர்களில் பெரும்பாலோர், நம்ப மறுப்பவர்களோடு தங்களைக் கூட்டாளிகளாக்கிக் கொள்வதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவர் களுடைய ஆன்மாக் களுக்காக அவர்களது கைகள் முற்படுத்தி அனுப்பியவை உன்மையில் துக்ககரமானவை ஆகும். கடவுள் அவர்களிடம்கோபம் கொள் கின்றார். மேலும் அதன் விளைவாக அவர்கள் தண்டனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.