குர்ஆன் 57:24 — இரும்பு
அவர்கள் கஞ்சர்களாக இருக்கின்றனர், மேலும் மக்களைக் கஞ்சர்களாக இருக்கும்படியும் ஏவு கின்றனர். ஒருவர் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் கடவுள் செல்வந்தர், புகழுக்குரியவராக இருக்கின்றார்.
[57:23] இதன்படி, நீங்கள் தவற விட்ட எந்த ஒன்றிற் காகவும் நீங்கள் துக்கப்படக் கூடாது, அன்றியும் அவர் உங்களுக்கு அளித்த எந்த ஒன்றிற்காகவும் கர்வம் கொள்ளவும் கூடாது. தற்பெருமை நிறைந்தவர்களை, கர்வம் கொண்டவர்களைக் கடவுள் நேசிப்பதில்லை.
[57:25] தெளிவான சான்றுகளால் ஆதரிக்கப்பட்டவர் களாக நம்முடைய தூதர்களை நாம் அனுப்பி னோம், மேலும் மக்கள் நீதியை ஆதரிக்கும் பொருட்டு, வேதத்தையும் சட்டத்தையும் அவர்களுக்கு நாம் இறக்கி அனுப்பினோம். மேலும் நாம் இரும்பை இறக்கி அனுப்பினோம், அதில் பலமும், மேலும் மனிதர்களுக்குப் பல பயன்களும் உள்ளன. இவை அனைத்தும் விசுவாசத்தின் மீது அவருக்கும், அவருடைய தூதருக்கும் ஆதரவளிப்பவர்கள் யார் என்பதைக் கடவுள் அடையாளம் காட்டுவதற்காகவேயாகும். கடவுள் சக்தி நிறைந்தவர், சர்வ வல்லமையுடையவர்.