குர்ஆன் 6:11 — கால்நடை
“பூமியில் சுற்றித்திரிந்து, ஏற்க மறுத்தவர் களுக்கு ஏற்பட்ட விளைவுகளைக் கவனியுங்கள்” என்று கூறுவீராக.
[6:10] உங்களுக்கு முன்னர் வந்த தூதர்களும் கேலி செய்யப்பட்டார்கள். எவர்கள் அவர்களைப் பரிகாசம் செய்தார்களோ, அவர்கள் கேலி செய்து கொண்டிருந்ததின் விளைவுகளை அனுபவித் தார்கள்.
[6:12] “வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் எவருக்குரியது?” என்று கூறுவீராக, “கடவுள்-க்கு” என்று கூறுவீராக. அவர் கருணையை தன்னுடைய தன்மையாக விதித்துக் கொண்டார். அவர் உறுதியாக, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டுவார், அது தவிர்க்க இயலாதது. நம்ப மறுப்பவர்கள் தான் தங்களுடைய ஆன்மாக்களை நஷ்டப் படுத்திக்கொண்டவர்கள் ஆவர்.