Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:149 — ஆன்மா தூய்மையடையும் இடம்

இறுதியாக, அவர்களுடைய செயலிற்காக அவர்கள் வருந்தி, மேலும் அவர்கள் வழிதவறிச் சென்றுவிட்டதை உணர்ந்த போது, அவர்கள், “எங்களுடைய இரட்சகர் அவருடைய கருணை யைக் கொண்டு எங்களை மீட்டு, மேலும் எங்களுடைய பாவங்களை மன்னிக்கவில்லை யெனில் நாங்கள் நஷ்டவாளிகளாகி விடு வோம்” என்று கூறினார்கள்.

[7:148] அவர் இல்லாத போது, மோஸஸின் மக்கள் அவர்களுடைய ஆபரணங்களைக் கொண்டு ஒரு கன்றுக்குட்டியின் சப்தத்தைக் கொண்டு பூர்த்தியான ஒரு கன்றுக்குட்டியின்* சிலையைச் செய்தனர். அது அவர்களிடத்தில் பேசவோ அல்லது எந்த ஒரு பாதையிலும் அவர்களை வழி நடத்தவோ முடியாது என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் அதை வழி பட்டனர், மேலும் இவ்வாறு தீயவர்கள் ஆயினர்.

[7:150] மோஸஸ் அவருடைய மக்களிடத்தில் சினமுற்ற வராகவும், அதிருப்தியடைந்தவராகவும் திரும்பிய போது, அவர், “ நான் இல்லாத போது எத்தகையதொரு பயங்கரமான காரியத்தை நீங்கள் செய்து விட்டீர்கள்! உங்களுடைய இரட்சகரின் கட்டளைகளுக்காக நீங்கள் காத்திருக்கக் கூடாதா?” என்று கூறினார். அவர் பலகைகளைக் கீழே எறிந்தார், மேலும் அவருடைய சகோதரரின் தலையை பற்றிப் பிடித்து, அவரை தன்னுடைய பக்கமாக இழுத்தார். (ஆரோன்) “என் தாயின் மகனே, மக்கள் என்னுடைய பலவீனத்தைச் சாதக மாக்கிக் கொண்டனர், மேலும் கிட்டத்தட்ட என்னைக் கொன்றே விட்டனர். என்னுடைய எதிரிகளை மகிழ்ச்சியடைய விட்டு விடாதீர், மேலும் வரம்பு மீறும் மக்களுடன் என்னையும் கணக்கிட்டுவிடாதீர்” என்று கூறினார்.