குர்ஆன் 7:150 — ஆன்மா தூய்மையடையும் இடம்
وَلَمّا رَجَعَ موسىٰ إِلىٰ قَومِهِ غَضبٰنَ أَسِفًا قالَ بِئسَما خَلَفتُمونى مِن بَعدى ۖ أَعَجِلتُم أَمرَ رَبِّكُم ۖ وَأَلقَى الأَلواحَ وَأَخَذَ بِرَأسِ أَخيهِ يَجُرُّهُ إِلَيهِ ۚ قالَ ابنَ أُمَّ إِنَّ القَومَ استَضعَفونى وَكادوا يَقتُلونَنى فَلا تُشمِت بِىَ الأَعداءَ وَلا تَجعَلنى مَعَ القَومِ الظّٰلِمينَ
மோஸஸ் அவருடைய மக்களிடத்தில் சினமுற்ற வராகவும், அதிருப்தியடைந்தவராகவும் திரும்பிய போது, அவர், “ நான் இல்லாத போது எத்தகையதொரு பயங்கரமான காரியத்தை நீங்கள் செய்து விட்டீர்கள்! உங்களுடைய இரட்சகரின் கட்டளைகளுக்காக நீங்கள் காத்திருக்கக் கூடாதா?” என்று கூறினார். அவர் பலகைகளைக் கீழே எறிந்தார், மேலும் அவருடைய சகோதரரின் தலையை பற்றிப் பிடித்து, அவரை தன்னுடைய பக்கமாக இழுத்தார். (ஆரோன்) “என் தாயின் மகனே, மக்கள் என்னுடைய பலவீனத்தைச் சாதக மாக்கிக் கொண்டனர், மேலும் கிட்டத்தட்ட என்னைக் கொன்றே விட்டனர். என்னுடைய எதிரிகளை மகிழ்ச்சியடைய விட்டு விடாதீர், மேலும் வரம்பு மீறும் மக்களுடன் என்னையும் கணக்கிட்டுவிடாதீர்” என்று கூறினார்.
[7:149] இறுதியாக, அவர்களுடைய செயலிற்காக அவர்கள் வருந்தி, மேலும் அவர்கள் வழிதவறிச் சென்றுவிட்டதை உணர்ந்த போது, அவர்கள், “எங்களுடைய இரட்சகர் அவருடைய கருணை யைக் கொண்டு எங்களை மீட்டு, மேலும் எங்களுடைய பாவங்களை மன்னிக்கவில்லை யெனில் நாங்கள் நஷ்டவாளிகளாகி விடு வோம்” என்று கூறினார்கள்.
[7:151] (மோஸஸ்) “என்னுடைய இரட்சகரே, என்னை யும், என்னுடைய சகோதரரையும் மன்னிப்பீராக, மேலும் உம்முடைய அருளில் நுழைய எங்களை அனுமதிப்பீராக. கருணையாளர்கள் அனை வரிலும் நீரே மிக்க கருணையாளர்” என்று கூறினார்.