குர்ஆன் 7:151 — ஆன்மா தூய்மையடையும் இடம்
(மோஸஸ்) “என்னுடைய இரட்சகரே, என்னை யும், என்னுடைய சகோதரரையும் மன்னிப்பீராக, மேலும் உம்முடைய அருளில் நுழைய எங்களை அனுமதிப்பீராக. கருணையாளர்கள் அனை வரிலும் நீரே மிக்க கருணையாளர்” என்று கூறினார்.
[7:150] மோஸஸ் அவருடைய மக்களிடத்தில் சினமுற்ற வராகவும், அதிருப்தியடைந்தவராகவும் திரும்பிய போது, அவர், “ நான் இல்லாத போது எத்தகையதொரு பயங்கரமான காரியத்தை நீங்கள் செய்து விட்டீர்கள்! உங்களுடைய இரட்சகரின் கட்டளைகளுக்காக நீங்கள் காத்திருக்கக் கூடாதா?” என்று கூறினார். அவர் பலகைகளைக் கீழே எறிந்தார், மேலும் அவருடைய சகோதரரின் தலையை பற்றிப் பிடித்து, அவரை தன்னுடைய பக்கமாக இழுத்தார். (ஆரோன்) “என் தாயின் மகனே, மக்கள் என்னுடைய பலவீனத்தைச் சாதக மாக்கிக் கொண்டனர், மேலும் கிட்டத்தட்ட என்னைக் கொன்றே விட்டனர். என்னுடைய எதிரிகளை மகிழ்ச்சியடைய விட்டு விடாதீர், மேலும் வரம்பு மீறும் மக்களுடன் என்னையும் கணக்கிட்டுவிடாதீர்” என்று கூறினார்.
[7:152] நிச்சயமாக, கன்றுக்குட்டியை இணைத்தெய்வ வழிபாடு செய்தவர்கள் அவர்களுடைய இரட்சகரின் கடும் கோபத்திற்கும், மேலும் இந்த வாழ்வில் இழிவிற்கும் உள்ளாகிவிட்டனர். புதுமைகளைப் புகுத்துவோருக்கு இவ்விதமாகவே நாம் பிரதிபலன் தருவோம்.