குர்ஆன் 7:195 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவைகளுக்கு கால்கள் இருந்து அதனால் நடக்கின்றனவா? அவைகளுக்கு கைகள் இருந்து அதனைக் கொண்டு அவைகள் தங்களை காத்துக் கொள்கின்றனவா? அவைகளுக்கு கண்கள் இருந்து அதனைக் கொண்டு அவைகள் பார்க்கின்றனவா? அவைகளுக்கு காதுகள் இருந்து அதனைக் கொண்டு கேட்கின்றனவா? கூறுவீராக, “உங்களுடைய இணைத் தெய்வங் களை அழையுங்கள், எந்த தாமதமுமின்றி என்னை வன்மையாகத் தாக்கும்படி அவை களிடம் கேளுங்கள்.
[7:194] கடவுள்-உடன் நீங்கள் பிரார்த்திக்கும் இணைத் தெய்வங்கள் உங்களைப் போன்ற படைப்பினங் களேயாகும். போய் அவைகளைக் கூப்பிட்டுப் பாருங்கள்; நீங்கள் செய்வது சரிதான் என்றால், அவைகள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்.
[7:196] “கடவுள் தான் என்னுடைய ஒரே இரட்சகர் மற்றும் எஜமானர்; இந்த வேதத்தை வெளிப்படுத்தியவர். அவர் நன்னெறியாளர் களைப் பாதுகாக்கின்றார்.