குர்ஆன் 7:94 — ஆன்மா தூய்மையடையும் இடம்
எந்த சமூகத்திற்கும் நாம் ஒரு வேதம் வழங்கப்பட்டவரை அனுப்பும் போதெல்லாம், அவர்கள் இறைஞ்சிப் பிரார்த்திக்கும் பொருட்டு அதன் மக்களை நாம் துன்பங்களைக் கொண்டும், கஷ்டங்களைக் கொண்டும் வருத்தினோம்.
[7:93] அவர், “என் சமூகத்தாரே, என்னுடைய இரட்சகரின் செய்திகளை நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், மேலும் நான் உங்களுக்கு உபதேசமும் செய்துவிட்டேன். நம்ப மறுக்கும் மக்களுக்காக நான் எப்படி துக்கப்பட இயலும்” என்று கூறியவராக அவர்களிடம் இருந்து திரும்பிச் சென்றுவிட்டார்.
[7:95] பின்னர் அந்தக் கஷ்டங்களின் இடத்தில் அமைதியையும், வளத்தையும் நாம் மாற்றிய மைத்தோம். ஆனால் அந்தோ, அவர்கள் கவனமற்றவர்களாக மாறி, “ வளத்திற்கு முந்திய அந்தக் கஷ்டத்தை எங்கள் பெற்றோர்கள் - தான் அனுபவித்தார்கள்” என்று கூறினார்கள். அதன் விளைவாக, அவர் கள் சற்றும் எதிர்பாராதபோது அவர்களை நாம் தண்டித்தோம்.