Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:95 — ஆன்மா தூய்மையடையும் இடம்

பின்னர் அந்தக் கஷ்டங்களின் இடத்தில் அமைதியையும், வளத்தையும் நாம் மாற்றிய மைத்தோம். ஆனால் அந்தோ, அவர்கள் கவனமற்றவர்களாக மாறி, “ வளத்திற்கு முந்திய அந்தக் கஷ்டத்தை எங்கள் பெற்றோர்கள் - தான் அனுபவித்தார்கள்” என்று கூறினார்கள். அதன் விளைவாக, அவர் கள் சற்றும் எதிர்பாராதபோது அவர்களை நாம் தண்டித்தோம்.

[7:94] எந்த சமூகத்திற்கும் நாம் ஒரு வேதம் வழங்கப்பட்டவரை அனுப்பும் போதெல்லாம், அவர்கள் இறைஞ்சிப் பிரார்த்திக்கும் பொருட்டு அதன் மக்களை நாம் துன்பங்களைக் கொண்டும், கஷ்டங்களைக் கொண்டும் வருத்தினோம்.

[7:96] அந்தச் சமூகத்தார் நம்பிக்கை கொண்டு நன்னெறியாளர்களாக மாறியிருந்தால் நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும், மற்றும் பூமியிலிருந்தும் அருட்கொடைகளைப் பொழிந் திருப்போம். அவர்கள் நம்ப மறுப்பதை தேர்ந்தெடுத்தமையால், அவர்கள் சம்பாதித்த வற்றிற்காக நாம் அவர்களைத் தண்டித்தோம்.