குர்ஆன் 7:96 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அந்தச் சமூகத்தார் நம்பிக்கை கொண்டு நன்னெறியாளர்களாக மாறியிருந்தால் நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும், மற்றும் பூமியிலிருந்தும் அருட்கொடைகளைப் பொழிந் திருப்போம். அவர்கள் நம்ப மறுப்பதை தேர்ந்தெடுத்தமையால், அவர்கள் சம்பாதித்த வற்றிற்காக நாம் அவர்களைத் தண்டித்தோம்.
[7:95] பின்னர் அந்தக் கஷ்டங்களின் இடத்தில் அமைதியையும், வளத்தையும் நாம் மாற்றிய மைத்தோம். ஆனால் அந்தோ, அவர்கள் கவனமற்றவர்களாக மாறி, “ வளத்திற்கு முந்திய அந்தக் கஷ்டத்தை எங்கள் பெற்றோர்கள் - தான் அனுபவித்தார்கள்” என்று கூறினார்கள். அதன் விளைவாக, அவர் கள் சற்றும் எதிர்பாராதபோது அவர்களை நாம் தண்டித்தோம்.
[7:97] தற்போதைய சமூகத்தில் உள்ள மக்கள் நம்முடைய தண்டனை அவர்களிடம் இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது வந்துவிடாது என்று உத்தரவாதம் கொண்டிருக் கின்றனரா?