குர்ஆன் 4:78 — பெண்கள்
நீங்கள் எங்கிருந்தபோதிலும், கடினமான கோட்டைகளுக்குள் வசித்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும், அவர்களுக்கு ஏதேனும் நல்லது நடந்தால் அவர்கள் “ இது கடவுள்-இடமிருந்து கிடைத்தது” என்று கூறுகின்றார்கள், மேலும் ஏதேனும் கெட்டது அவர் களை துன்புறுத்தினால் அவர்கள் உங்கள் மீது பழி சுமத்துகின்றார்கள். “அனைத்தும் கடவுள்- இடமிருந்தே வருகின்றது,” என்று கூறுவீராக. ஏன் இந்த மக்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்கின்றார்கள்?
[4:77] “நீங்கள் சண்டையிட வேண்டியதில்லை;நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பதும் மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுப்பதுமே” என்று கூறப்பட்டவர்களிடம், பின்னர், சண்டையிடும்படி அவர்களுக்கு கட்டளையிடப்பட்டபோது, அவர்கள் கடவுள்-க்கு அஞ்சுவது போல் மக்களுக்கு அவர்கள் அஞ்சியதை, அல்லது அதை விடவும் அதிகமாக அஞ்சியதை நீர் கவனித்திருக்கின்றீரா? அவர்கள் “எங்கள் இரட்சகரே, ஏன் இந்த சண்டையை எங்கள் மீது கட்டாயப் படுத்தினீர்? நீர் மட்டும் எங்களுக்குச் சிறிது காலம் ஓய்வளித்திருந்தால்,” என்று கூறினார்கள். “இந்த உலகின் பொருட்கள் ஒன்றுமில்லை, அதே சமயம் நன்னெறியாளர்களுக்கு மறுவுலகம் மிகவும் சிறந்தது, மேலும் நீங்கள் ஒருபோதும் சிறிதளவும் அநீதத்தையும் அனுபவிக்கமாட்டீர்கள்” என்று கூறுவீராக.
[4:79] உங்களுக்கு நிகழும் நல்லது எதுவும் கடவுள்- இடமிருந்து வருகின்றது, மேலும் உங்களுக்கு நிகழும் கெட்டது எதுவும் உங்களிடமிருந்தே வருகின்றது. நாம் உம்மை மக்களுக்கு ஒரு தூதராக அனுப்பியுள்ளோம்,* மேலும் சாட்சியாளராக இருக்க கடவுள் போதுமானவர்.