Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 5: விருந்து — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 5, the Feast (Al-Mã´Edah)

YouTube · 42:20

ஸூரா 5: விருந்து

[5:1] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் உங்களது உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். குறிப்பிட்டு இதில் தடுக்கப்பட்டுள்ளவற்றைத் தவிர, கால் நடைகளை உண்ணுவதற்கு உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஹஜ் புனிதயாத்திரை முழுவதிலும் வேட்டை யாடுவதை நீங்கள் அனுமதிக்க வேண்டாம். கடவுள் அவர் விரும்பியவற்றைக் கட்டளை யிடுகின்றார்.

[5:2] நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-ஆல் ஏற்படுத்தப்பட்ட சடங்குகளை மீறாதீர்கள், அன்றி புனித மாதங்களுக்கும், பலியிடப் படவேண்டிய பிராணிகளுக்கும், அவற்றை அடையாளம் காட்டும் மாலைகளுக்கும், தங்களுடைய இரட்சகரிடமிருந்து அருட் கொடைகளையும் மேலும் அங்கீகாரத்தையும் தேடிப் புனிதஸ்தலத்தை (கஃபா) நோக்கிச் செல்பவர்களுக்கும் கெடுதல் செய்யாதீர்கள். நீங்கள் புனித யாத்திரையை நிறைவு செய்து விட்டால் நீங்கள் வேட்டையாடலாம். * புனித மஸ்ஜிதிற்கு நீங்கள் செல்வதை முன்னொரு சமயம் தடுத்த மக்களின் மீதுள்ள பகைமை யினால் சினம் கொண்டவர்களாகி, வலுச் சண்டையில் ஈடுபடாதீர்கள். நன்னெறி மற்றும் பயபக்தியின் விஷயங்களில் நீங்கள் ஒத் துழைத்துக் கொள்ளுங்கள், பாவகரமான மற்றும் தீய விஷயங்களில் ஒத்துழைக்காதீர்கள். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள். கடவுள் தண்டனையை நிறை வேற்றுவதில் கண்டிப்பானவர்.

[5:3] தானாக இறந்து போன பிராணிகள், இரத்தம், பன்றிகளின் இறைச்சி*, மேலும் கடவுள் அல்லாத மற்றவைக்குப் படைக்கப்பட்ட பிராணிகள் ஆகியவை உங்களுக்கு தடுக்கப் பட்டுள்ளன. குரல்வளை நெறித்து ஒரு பொருளால் தாக்கப்பட்டு, உயரத்திலிருந்து விழுந்து, குத்திக் கிழிக்கப்பட்டு, வன விலங்கி னால் தாக்கப்பட்டு இறந்தவைகள் - அவை இறப்பதற்கு முன்பு நீங்கள் உங்கள் பிராணி யைக் காப்பாற்றினாலன்றி-மேலும் பலி பீடங் களில் பலியிடப்பட்ட பிராணிகள் ஆகியவை (தானாக இறந்து போன பிராணிகளில் உட்பட்டவை). மேலும் ஒரு அதிர்ஷ்ட விளை யாட்டின் மூலம் இறைச்சியைப் பங்கிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது; இது ஒரு மிகவும் அருவருப்பானதாகும். இன்று நம்பமறுப்பவர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அடியோடு அழிப்பது) குறித்து நம்பிக்கை இழந்து விட்டார்கள், அவர்களுக்கு அஞ்சாதீர்கள், மாறாக எனக்கே அஞ்சுங்கள். இன்று உங்களு டைய மார்க்கத்தை நான் நிறைவு செய்து விட்டேன். உங்கள் மீது என்னுடைய அருட்கொடையை பூரணமாக்கினேன், மேலும் உங்களுக்கான மார்க்கமாக அடிபணிதலை நான் விதித்துள்ளேன். வேண்டுமென்றே பாவகரமாக இல்லாமல், பஞ்சத்தினால் ஒருவன் (தடுக்கப்பட்ட உணவை உண்பதற்கு) நிர்ப் பந்திக்கப்பட்டால், பின்னர் கடவுள் மன்னிப் பவர், கருணையாளர்.

[5:4] அவர்களுக்குச் சட்டபூர்வமாக அனுமதி க்கப்பட்டவை குறித்து உம்மிடம் அவர்கள் ஆலோசிக்கின்றனர்; “பயிற்றுவிக்கப்பட்ட நாய்கள் மற்றும் வல்லூறுகள் உங்களுக்காகப் பிடித்து வருபவை உட்பட, நல்லவை அனைத்தும் உங்களுக்குச் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன” என்று கூறுவீராக. கடவுள்-ன் போதனைகளுக்கு இணங்க அவற்றை நீங்கள் பயிற்றுவியுங்கள். அவை உங்களுக்காகப் பிடித்து வருபவற்றை நீங்கள் உண்ணலாம், மேலும் அவற்றின் மீது கடவுள்-ன் பெயரைக் குறிப்பிடுங்கள். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள். கணக்கிடுவதில் கடவுள் மிகத் திறன் வாய்ந்தவர்.

[5:5] இன்று, நல்ல உணவுகள் அனைத்தும், உங்களு க்குச் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதத்தை உடைய மக்களின் உணவுகளும் உங்களுக்குச் சட்டபூர்வமாக ஆகுமாக்கப் பட்டுள்ளது. இன்னும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய வரதட்சணைத் தொகையை அவர்களிடம் கொடுத்துவிடும் பட்சத்தில், நம்பிக்கையாளர்களில் கற்புள்ள பெண்களையும், அதே போல் முந்தைய வேதத்தைப் பின்பற்றுபவர்களில் கற்புள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். விபச்சாரத்திற்குட்படாமலும், இரகசியக் காதலர்களை ஏற்படுத்திக் கொள்ளாமலும், நீங்கள் கற்பைப் பேணிக் கொள்ளுங்கள். எவரொருவர் விசுவாசத்தை நிராகரிக்கின்றாரோஅவருடையஅனைத்துக் காரியங்களும் வீணானதாகிவிடும், மேலும் மறுவுலகில் அவர் நஷ்டம் அடைந்தவர்களுடன் இருப்பார்.

[5:6] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கும் போது நீங்கள்: (1) உங்கள் முகங்களை கழுவிக் கொள்ளுங்கள், (2) உங்கள் கைகளை முழங்கை கள் வரை கழுவிக்கொள்ளுங்கள், (3) உங்கள் தலைகளைத் தடவிக் கொள்ளுங்கள் மேலும் (4) உங்களுடைய பாதங்களைக் கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள். புணர்ச்சியின் பரவசத் தால் நீங்கள் சுத்தமற்றவர்களாக இருந்தால் நீங்கள் குளிக்க வேண்டும். நீங்கள் நோயுற்றோ அல்லது பயணத்திலோ இருந்தால், அல்லது செரி மானம் சார்ந்த ஏதேனும் கழிவு ஏற்பட்டிருந்தால் (சிறுநீர், மலம் அல்லது வாயு), அல்லது பெண் களுடன் (பாலியல்) உறவு கொண்டுவிட்டால், மேலும் உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனால், சுத்தமான காய்ந்த மணலைத் தொட்டு, பின்னர் உங்களது முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்வதன் மூலம் உலர்ந்த அங்க சுத்தி (தயம்மும்) செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு மார்க்கத்தைக் கடினமானதாக்கு வதற்கு கடவுள் விரும்பவில்லை. நீங்கள் நன்றி உடையோராய் இருக்கும் பொருட்டு உங்களை சுத்தப்படுத்துவதற்கும், உங்கள் மீது தன்னுடைய அருட்கொடையை முழுமையாக்குவதற்குமே அவர் விரும்புகின்றார்.

[5:7] உங்கள் மீதுள்ள கடவுள்-ன் அருட் கொடையையும், மேலும் உங்களுடன் உடன் படிக்கை செய்து கொண்ட அவருடைய உடன் படிக்கையையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் “ நாங்கள் கேட்கின்றோம், மேலும் நாங்கள் கீழ்படிகின்றோம்” என்று கூறினீர்கள். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள்; கடவுள் ஆழ்மனதின் எண்ணங்களையும் முழுமையாக அறிவார்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 5